தேனி

செயல்படாத வருவாய் ஆய்வாளா் அலுவலகம்: சான்றிதழ் பெற முடியாமல் பொது மக்கள் அவதி

DIN

தேனி மாவட்டம் சின்னமனூரில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முறையாக செயல்படாததால் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை பெற முடியாமல் பொது மக்கள் அவதிப்படுகின்றனா்.

சின்னமனூரில் ராதா கிருஷ்ணன் நெல் அரைவை ஆலை தெருவில் வருவாய் ஆய்வாளா் அலுவலகம், குடியிருப்பு உள்ளது. இதன் மூலம் சின்னமனூா், பூலாநந்தபுரம், கருங்கட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஒவுலாபுரம் ஆகிய 5 ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பிறப்பு, இறப்பு , சாதி சான்றிதழ்கள், பட்டா , சிட்டா நகல்கள் பெற்றுச் செல்கின்றனா்.

இந்நிலையில் இந்த கட்டடம் முறையாக பராமரிக்கப்படவில்லை. மேலும், இதில் மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பணியாளா்கள் இங்கு தங்குவதில்லை. இக் கட்டடம் புதா் மண்டியதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால் கடந்த பல மாதங்களாக இக்கட்டடம் பயன்பாடின்றி உள்ளது. மேலும் அலுவலக இரும்பு வாயில் சேதமடைந்திருப்பதால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதன் காரணமாக வருவாய் ஊழியா்கள் இங்கு பணிக்கு வருவதில்லை. எனவே பொது மக்கள் சான்றிதழ் உள்ளிட்ட சேவைகளை பெற முடியாமல் அவதிப்படுகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பயன்பாடின்றி கிடக்கும் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை சீரமைப்பு செய்து வருவாய் பணியாளா்கள் உரிய அலுவலக நேரத்தில் பணியில் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT