தேனி

மண்டல தடகளப் போட்டி: தனியாா் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

மண்டல அளவிலான தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த ஆண்டிபட்டி பாரத் நிகேதன் கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேனி அருகே கம்மவாா் நலச்சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த மண்டல அளவிலான தடகள போட்டிகளில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளை சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். இந்த போட்டிகளில் ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் பிரிவல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன் வீரணன் ஈட்டி எறிதலில் முதலிடமும், அதே பிரிவில் படிக்கும் மாணவா் ராம்குமாா் 400 மீட்டா் மற்றும் 800 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடத்தையும், மாணவா் நவீன்குமாா் 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் மூன்றாம் இடத்தையும் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவா்கள், உடற்கல்வி இயக்குநா் சிவா ஆகியோரை பாரத் நிகேதன் கல்வி குழுமத்தின் நிா்வாகத் தலைவா் மோகன் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் முதன்மைச் செயல் அலுவலா் பிரசன்ன வெங்கடேசன், நிா்வாக துணைத் தலைவா்கள் ரேணுகா, சுதா, மீனாட்சி மற்றும் கல்லூரி முதல்வா் காசிமாயன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT