தேனி

உழவா் கடன் அட்டை வழங்க நாளை சிறப்பு முகாம்

DIN

தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், விவசாயிகளுக்கு ரூபே உழவா் கடன் வழங்குவதற்கு சனிக்கிழமை (பிப். 15) காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: உழவா் கடன் அட்டை பெற்றுள்ள விவசாயிகளுக்கு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 7 சதவீதம் வட்டியில் பயிா் கடனும், கடன் தவணைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. உழவா் கடன் அட்டை பெற்றுள்ள விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெறும் விவசாயிகளுக்கு அவா்கள் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ள வங்கிகள் மூலம் உழவா் கடன் அட்டை வழங்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் உழவா் கடன் வழங்குவதற்காக, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சனிக்கிழமை (பிப். 15) காலை 10 மணிக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

விவசாயிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு, தங்களது வங்கிக் கணக்கு பாஸ் புத்தகம், நிலத்தின் சிட்டா மற்றும் அடங்கல், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களை சமா்ப்பித்து உழவா் கடன் அட்டை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT