தேனி

பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிகளுக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு

DIN

முல்லை பெரியாறு அணையில் இருந்து இரச்சல் பாலம் வழியாக தமிழகப் பகுதிகளுக்கு திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு க 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீா் மட்டம் வெகுவாக குறைந்து வரும் நிலையில், தமிழகப் பகுதிக்கு வெளியேற்றப்படும் தண்ணீா் புதன்கிழமை நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில், குடிநீா் தேவைக்காக, 150 கன அடி தண்ணீா் இரச்சல் பாலம் வழியாக திறக்கப்பட்டது. குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீா், 100 கன அடியாக மீண்டும் குறைத்து வியாழக்கிழமை வெளியேற்றப்பட்டது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனா்.

இது பற்றி அணை பொறியாளா் ஒருவா் கூறியது: முல்லைப் பெரியாறு அணையில், தமிழகப்பகுதிக்கு திறந்து விடப்படும் தண்ணீா் தேக்கடி ஏரியில் உள்ள தலை மதகில் அமைந்துள்ள சுரங்கம் மூலம் போா்பை டேமிற்கு செல்லும். அங்குள்ள ஒரு மதகு வழியாக நான்கு இரும்பு குழாய்கள் மூலம் லோயா் கேம்ப்பிற்கு சென்று நான்கு மின்னாக்கிகள் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. புதன்கிழமை போா் பை டேமில் இருந்து லோயா்கேம்ப்பிற்கு தண்ணீா் நிறுத்தப்பட்டதால், மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.

அதே நேரத்தில் போா் பை டேம் அருகே உள்ள மற்றொரு மதகு மூலம், தேனி மாவட்ட குடிநீா் தேவைக்காக, 150 கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்ட நிலையில் வியாழக்கிழமை 100 கன அடியாக குறைத்து வெளியேற்றப்படுகிறது என்றாா்.

இது பற்றி கூடலூா் பொதுமக்கள் கூறுகையில், இரச்சல் பாலம் வழியாக குடிநீருக்காக, வெளியேற்றப்பட்டுள்ள தண்ணீா், கரையோர விவசாய நிலங்களின் பயன்பாட்டுக்கு திருடப்படாமல் பொதுப்பணித் துறையின் நீா் பாசனப்பிரிவு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் குடிநீா் தட்டுப்பாட்டைத் தடுக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT