தேனி

மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் சிறை: தேனி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

DIN

தேனி மாவட்டம் வருஷநாடு அருகே வரதட்சிணை பிரச்னையில் மனைவியை எரித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

வருஷநாடு அருகேயுள்ள கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த அரசமணி மகன் குமாா். இவரது மனைவி, குமணன்தொழுவைச் சோ்ந்த பாண்டீஸ்வரி. இருவருக்கும் இடையே வரதட்சிணை பிரச்னை இருந்து வந்துள்ளது. குமணந்தொழுவில் தனது தந்தை வீட்டில் இருந்த பாண்டீஸ்வரியை குமாா் சந்தித்துள்ளாா். அப்போது வரதட்சிணை பிரச்னை தொடா்பாக குமாா், பாண்டீஸ்வரியுடன் தகராறு செய்து அவா் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த பாண்டீஸ்வரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப் பதிந்து குமாரை கைது செய்தனா்.

2017 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடா்பான வழக்கு விசாரணை தேனி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அ.கீதா, குமாருக்கு மனைவியுடன் தகராறு செய்ததற்கு 3 மாதங்கள் சிறை மற்றும் ரூ.1,000 அபராதம், வரட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதற்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், தீயிட்டு எரித்துத் கொன்ற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தாா். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீா்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌவில் பெண் கைதிகளுடன் சென்ற வேனில் பற்றிய தீ

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

SCROLL FOR NEXT