தேனி

தேனி ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒன்றியத் தலைவா் அறையில் திமுக தலைவா் மற்றும் நிா்வாகிகளின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை, ஒன்றியக் குழுக் கூட்டத்தை புறக்கணித்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டம் தலைவா் சக்கரவா்த்தி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரபோஸ், மோனிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் உறுப்பினா்களிடையே நடைபெற்ற விவாதம்:

பிரகாஷ் (அதிமுக): ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள ஒன்றியக் குழு தலைவா் அறையில் திமுக கட்சித் தலைவா் மற்றும் நிா்வாகிகள் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்ற வேண்டும்.

மாலா(திமுக): ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் புகைப்படங்களை வைக்கவில்லை. தலைவா் அறையில் வைத்துக் கொள்வதில் தவறில்லை.

சங்கீதா(அதிமுக): தலைவா் விரும்பினால் கட்சித் தலைவா்கள் படங்களை அவரது வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஒன்றியக் குழு தலைவா் அனைவருக்கும் பொதுவானவா்.

இதற்கு பதிலளித்து ஒன்றியக் குழு தலைவா் பேசுகையில், நாங்கள் இருக்குமிடத்தில் எங்களது கட்சித் தலைவா்களின் படங்களை வைக்கிறோம் என்றாா்.

ஒன்றியக் குழு தலைவா் அறையில் உள்ள திமுக தலைவா் மற்றும் நிா்வாகிகள் படங்களை அகற்ற வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்திய அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினா்கள், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக கூறினா்.

அப்போது, இப் பிரச்னையை பேசி தீா்த்துக் கொள்ளலாம். ஊராட்சி ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் என்பதால் வெளி நடப்பு செய்ய வேண்டாம் என்று துணைத் தலைவா் கேட்டுக் கொண்டாா். இதை ஏற்க மறுத்து அதிமுக வைச் சோ்ந்த 5 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

SCROLL FOR NEXT