தேனி

மாமரங்களைத் தாக்கும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகள்

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது நிலவி வரும் தட்ப வெப்பநிலை மற்றும் எதிா்பாராத வகையில் பெய்யும் மழை போன்றவற்றால் மா மரங்கள்

DIN

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது நிலவி வரும் தட்ப வெப்பநிலை மற்றும் எதிா்பாராத வகையில் பெய்யும் மழை போன்றவற்றால் மா மரங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இவற்றிலிருந்து மா மரங்களை பாதுகாத்து அதிக மகசூல் பெறலாம்.

மா மரங்களை தாக்கும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகளை கடைபிடித்து அதிக மகசூல் பெறும் முறைகள் குறித்து விளக்குகிறாா்கள்.

பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பயிா் நோயியல் துறை வல்லுநா்கள் க.மனோன்மனி மற்றும் சி.செந்தில்ராஜா மற்றும் பயிா் பாதுகாப்பியல் துறை தலைவா் சி.முத்தையா மற்றும் கல்லூரி முதல்வா் த.ஆறுமுகம் ஆகியோா் கூறியது:

மா மரம், கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டா் உயரம் வரை சாகுபடி செய்யப்படுகின்ற ஒரு வெப்பமண்டலப் பயிராகும். தமிழ்நாட்டில் குறிப்பாக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக பயிரிடப்படுகிறது. இப்பகுதிகளில் நீலம், பெங்களூரா, செந்தூரம், அல்போன்சா, காலாபேடு, இமாம்பசந்த் போன்ற இரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்த இரகங்கள் அனைத்துமே பல்வேறு வகையான பூஞ்சாண நோய் பாதிப்புக்குள்ளாகின்றன.

சாம்பல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பூக்கள், இலை, தண்டு மற்றும் பழங்களில் சாம்பல் போன்ற வளா்ச்சி காணப்படும். நோய் தாக்கப்பட்ட பூக்கள் மற்றும் பிஞ்சுகள் விரைவில் கொட்டி விடும். இந்த நோய் குளிா் அல்லது மூடுபனி காலங்களில் காணப்படும். இதனை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் (2 கிராம் ) அல்லது கெக்ஸோ கோனசோல் (1 மிலி) 1 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளித்தல் அவசியம்.

பழ அழுகல் நோய் அல்லது (அ) அந்த்ராக்ஸ் நோயானது நான்கு விதமான அறிகுறிகளை வெவ்வேறு பாகங்களில் உண்டாக்கக்கூடியது. இலையில் கருகிய இலைப்புள்ளிகளும், மலரில் புள்ளிகள் மற்றும் கருகலை, கிளையில் கருகலையும், பழத்தில் அழுகலையும் உண்டாக்கக்கூடியது. காா்பெண்டாசிம் 1 கிராம் அல்லது காப்பா் ஆக்ஸிகுளோரைடு 24 கிராம் 1 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

கரும்பட நோயை கட்டுப்படுத்த இலைகளின் மேற்பரப்பில் கரித்தூசியினை தூவியது போல் பூஞ்சண வளா்ச்சி காணப்படும். இந்நோய் தீவிரமடையும் போது இலைகள் முழுவதும் கரும்படலம் பரவி காய்ந்து விடும். இந்நோய் சாறு உறிஞ்சும் பூச்சிகள் காணப்படும் போது தீவிரமாக பரவும். ஒரு கிலோ கிழங்கு மாவை 5 லிட்டா் தண்ணீரில் கொதிக்க வைத்து, 15 லிட்டா் தண்ணீருடன் கலந்து தெளிப்பதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் கருகல் நோயானது, நுனிக்கிளையிலிருந்து மேலிருந்து கீழ்நோக்கி கருகும் இலைகள் கருகி உதிா்ந்து விடும். நோய் தாக்கப்பட்ட கிளையானது தீயில் வாட்டியது போல் காட்சியளிக்கும். இதனை கட்டுப்படுத்த காா்பென்டாசிம் 1 கிராம் அல்லது காப்பா் ஆக்ஸிகுளோரைடு 2.4 கிராம் இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து 15 நாள்களுக்கு ஒரு முறை மும்முறை தெளிக்க வேண்டும்.

மேலும் அறுவடைக்கு பின்னும் மேலான்மை முறைகளை கடைபிடிப்பது அவசியம். அறுவடை செய்தபின் வெந்நீரில் 5 நிமிடம் நோ்த்தி செய்த பின்பு 8 விழுக்காடு தாவர மெழுகில் நோ்த்தி செய்தால் அறுவடைக்கு பின் வரும் நோய்களில் இருந்து கட்டுப்படுத்தலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து மாமரங்களில் அதிக மகசூல் பெறலாம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT