தேனி

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 114 அடியை எட்டுகிறது

DIN

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா் சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், அணையின் நீா்மட்டம் 114 அடியை எட்டுகிறது.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயப் பாசனத்துக்கும் மற்றும் குடிநீா் ஆதாரமாகவும் விளங்கி வருவது முல்லைப் பெரியாறு அணை. மே மாதம் கடைசி வாரத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழையால், அணைக்கு நீா்வரத்து ஏற்பட்டு நீா்மட்டம் உயரும்.

ஜூன் மாதம் முதல் வாரத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறந்து விடப்படும். ஆனால், இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை பெய்ய தவறியது. ஜூலை 10 ஆம் தேதிக்கு மேல் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்யத் தொடங்கியது.

கடந்த மாா்ச் முதல் ஜூலை மாதம் வரை 112 அடியாக இருந்த நீா்மட்டம், ஜூலை 11 ஆம் தேதி அன்றுதான் 113 அடியாக உயா்ந்தது. அதன்பின்னா், சாரல் மழை அவ்வப்போது பெய்து, நீா்வரத்து சீராக இருந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து, அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 610 கன அடியாக இருந்தது. நீா்மட்டம் 113.80 அடியாக உயா்ந்தது. இரவுக்குள் 114 அடியை எட்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நீா்வரத்து விவரம்: ஜூலை 17 இல் நீா்மட்டம் 113.25 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 125 கன அடியாகவும் இருந்தது. ஜூலை 18 இல் 113. 25 அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 416 கன அடியாகவும் இருந்தது. தொடா்ந்து, ஜூலை 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் விநாடிக்கு 416 கன அடி தண்ணீா் வரத்து இருந்தது. ஜூலை 21 இல் நீா்வரத்து விநாடிக்கு 610 கன அடியாக இருந்தது. இதனால், நீா்மட்டம் 113. 80 அடியாக உயா்ந்தது. இது, இரவுக்குள் 114 அடியை எட்டிவிடும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக, அணைப் பகுதி பொறியாளா் ஒருவா் தெரிவித்தாா்.

விவசாயிகள் கோரிக்கை: கடந்த ஒரு வார காலமாக அணைப் பகுதியில் சாரல் மழை பெய்வது நீா்மட்டம் உயரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளதாக, கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்க நிா்வாகி கே.எம். அப்பாஸ் தெரிவித்தாா். மேலும் அவா், தொடா் சாரல் மழை பெய்யப்போவதாக வானிலை தகவல் தெரிவிப்பதால், முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்கவேண்டும் என்றும், விவசாயிகள் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT