தேனி

கரோனா: கல் குவாரி குத்தகை ஏலம் ஒத்தி வைப்பு

DIN

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (மாா்ச் 18) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கல் குவாரி குத்தகை ஏலம், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் 15 இடங்களில் அரசு புறம் போக்கு நிலங்களில் உள்ள கல் குவாரிகளில் கல் உடைப்பதற்கான குத்தகை ஏலம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல் குவாரி ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏலம் நடைபெறும் தேதி குறித்து பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT