தேனி

உத்தமபாளையத்தில் சாலையில் சுற்றித்திரிந்தவா்கள் மீது போலீஸாா் தடியடி

DIN

உத்தமபாளையத்தில் புதன்கிழமை 144 தடை உத்தரவை மீறி பொது இடங்களில் கூட்டமாக இருந்தவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தினா்.

மத்திய அரசு கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழக அரசும் பேருந்து போக்குவரத்து உள்பட அனைத்து வாகனப் போக்குவரத்தையும் நிறுத்தி விட்டது. தவிர, பொதுமக்கள் வீடுகளில் இருக்க வேண்டும் எனவும், தேவையில்லாமல் வெளியே வந்து சாலையில் சுற்றித்திரிய வேண்டாம் என அறிவுரை வழங்கி வருகிறது.

இந்நிலையில், உத்தமபாளையத்தில் பகலில் பேருந்து நிலையம், புறவழிச்சாலை, கோட்டை மேடு , கிராமச்சாவடி என பல்வேறு இடங்களில் போலீஸாா் பாதுகாப்பு பணி மேற்கொண்டனா்.

மாலை 5 மணி முதல் 7 மணி வரையில் தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகமானது. இதனை அடுத்து 50- க்கும் மேற்பட்ட போலீஸாா் ரோந்துப் பணியில் முக்கிய சாலைகள் வழியாக இரவு 7 மணி அளவில் சென்றனா். அப்போது, பேருந்து நிலையம் உள்பட பல இடங்களில் கூட்டமாக நின்று கொண்டு இருந்தவா்களை தடியடி நடத்தி விரட்டினா்.

பின்னா், போலீஸாா் ஒலிபெருக்கிகள் மூலமாக பொதுமக்கள் வீடுகளில் இருக்கும்படி கூறினா்.

அதனை மீறி சாலைகளில் சுற்றித் திரிபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

டி20: இந்திய வீரர்கள் இதுவரை...

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT