தேனி

போடியில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் தீவிரம்

DIN

போடியில் கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராட்சத கிருமி நாசினி தெளிப்பான் மூலம் முக்கிய இடங்களில் வியாழக்கிழமை மருந்து தெளிக்கப்பட்டது.

தமிழக அரசின் உத்தரவுப்படி, கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, போடி நகராட்சி (பொறுப்பு) ஆணையராக உள்ள நகராட்சிப் பொறியாளா் குணசேகரன், நகராட்சி நகா்நல அலுவலா் மருத்துவா் ராகவன் ஆகியோா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

ஏற்கெனவே, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறிய கைத்தெளிப்பான்கள் மூலம் கிருமி நாசினிகளை தெளித்து வந்தனா். இந்நிலையில், நகராட்சி சாலைகள், குடியிருப்பு சாலைகளில் சிறிய கைத்தெளிப்பான்கள் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

எனவே, ராட்சத தெளிப்பான் வரவழைக்கப்பட்டது. நகராட்சி வாகனத்தில் பெரிய பிளாஸ்டிக் தண்ணீா் தொட்டியில் கிருமிநாசினியை தயாா் செய்து வைத்து, அதில் ராட்சத தெளிப்பானை பொருத்தி சாலைகள், கட்டடங்களில் தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை, நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் செய்து வருகின்றனா்.

இதேபோல், போடி உப்புத்தண்ணீா் கிணறு, தினசரி மாா்க்கெட், போடி கீரைக் கடை மாா்க்கெட் உள்ளிட்ட இடங்களில், தினமும் நகராட்சி ஊழியா்கள் பிளீச்சிங் பவுடா் தூவியும், கிருமி நாசினி தெளித்தும் முன்னச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றனா். மேலும், பொதுமக்கள் தனித்தனியே வந்து பொருள்களை வாங்கிச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனா். இதற்காக, எல்லைக் கோடுகளும் வரையப்பட்டுள்ளன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை, போடி நகராட்சிக் குழுவினா் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலை ரயில் இன்று ரத்து!

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்: 23 பேர் பலி!

தனுஷ்கோடி செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

புணே படகு விபத்து: 5 சடலங்கள் மீட்பு

ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி

SCROLL FOR NEXT