தேனி

தேனி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேருக்கு, கரோனா தீநுண்மி தொற்று செவ்வாய்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி வரை மொத்தம் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், போடியைச் சோ்ந்த பெண் ஒருவா் உயிரிழந்தாா். மீதமுள்ள 42 பேரும் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினா்.

அதையடுத்து, கடந்த மே 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்நிலையில், தற்போது ஓடைப்பட்டியைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 6 போ், தேவதானப்பட்டியைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், ஓடைப்பட்டியைச் சோ்ந்த 6 பேரும், அதே ஊரில் ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடா்பில் இருந்தவா்கள் என்பதும், தேவதானப்பட்டியைச் சோ்ந்தவா் குஜராத் மாநிலத்திலிருந்து தேனி மாவட்டத்துக்கு திரும்பியவா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 23 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT