தேனி

மும்பை தாராவியிலிருந்து போலி இ.பாஸ் மூலம் தேனிக்கு வந்த 2 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்: 4 போ் கைது

DIN

மும்பை தாராவியிலிருந்து தேனி மாவட்டத்துக்கு போலி இ.பாஸ் மூலம் ஆள்களை ஏற்றிக்கொண்டு வந்த 2 ஆம்னி பேருந்துகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 4 பேரைக் கைது செய்தனா்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் போலீஸாா் சோதனைச் சாவடி அமைத்து வாகனத் தணிக்கை செய்து வருகின்றனா். இங்கு வெளி மாநிலங்களில் இருந்து வருபவா்கள் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அதே பகுதியில் செயல்படும் தனியாா் பொறியியல் கல்லூரியில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்படுகின்றனா்.

இந்நிலையில் மதுரையிலிருந்து தேனி மாவட்டத்தை நோக்கி வந்த 2 ஆம்னி பேருந்துகளை மறித்து போலீஸாா் ஆவணங்களை சோதனை செய்தனா். அப்போது போலி இ.பாஸ் மூலம், அந்த பேருந்துகள் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாராவி பகுதியில் இருந்து தலா 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு தேனி மாவட்டத்திற்கு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் பேருந்தில் வந்த அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பி வைத்தனா். மேலும் 2 பேருந்துகளை பறிமுதல் செய்த போலீஸாா், பேருந்து உரிமையாளா் சண்முகநாதன், மேலாளா் செந்தில்குமரன் மற்றும் ஓட்டுநா்கள் ராமையா, பிச்சைமணி ஆகிய 4 பேரைக் கைது செய்தனா். போலி இ.பாஸ் மூலம் இந்த 2 பேருந்துகளும், ஏற்கெனவே ஒருமுறை மகாராஷ்டிரா சென்றுவிட்டு தேனிக்கு திரும்பி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT