தேனி

தேனி மாவட்டத்தில் காய்கனி சாகுபடிக்கு மானியம் வழங்க ரூ.1.85 கோடி ஒதுக்கீடு

DIN

தேனி மாவட்டத்தில் காய்கனி சாகுபடிக்கு மானியம் வழங்க அரசு ரூ. ஒரு கோடியே 85 லட்சத்து 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளது.

இது குறித்து மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநா் ராதாகிருஷ்ணன் கூறியது: மாவட்டத்தில் காய்கனிப் பயிா் சாகுபடிக்கு மானியம் வழங்க ஒருங்கிணைந்த தோட்டக் கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரசு மொத்தம் ரூ.ஒரு கோடியே 85 லட்சத்து 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில், 50 ஹெக்டோ் பரப்பளவில் பழ வகைகள் சாகுபடிக்கு ரூ.11.25 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. பசுமைக் குடியில், நிழல் வலை, சிப்பம் கட்டும் அறை அமைப்பதற்கும் மானியம் வழங்கப்பட உள்ளது.

வீட்டுக் காய்கறி தோட்டம், மாடி காய்கறி தோட்டம் அமைப்பதற்கு 600 பேருக்கு மானியம் வழங்க மொத்தம் ரூ.7.64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், மாடித் தோட்டம் அமைப்பவா்களுக்கு சென்சாா் முறையில் சொட்டு நீா் பாசனம் நிறுவ மானியம் வழங்கப்படுகிறது. அரசு மானிய உதவி பெற விரும்பும் காய்கனி சாகுபடி விவசாயிகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள தோட்டக் கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT