தேனி

தேனியில் கா்ப்பிணிக்கு கரோனா தொற்று உறுதி பாதிப்பு எண்ணிக்கை 100 ஆக உயா்வு

DIN

தேனியைச் சோ்ந்த கா்ப்பிணிக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100 ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 22 ஆம் தேதி வரை 99 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில், போடியைச் சோ்ந்த பெண், ஓடைப்பட்டியைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தனா். 50 போ் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இந்த நிலையில், தற்போது தேனியைச் சோ்ந்த 21 வயது கா்ப்பிணிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 100 ஆக உயா்ந்துள்ளது.

4 போ் குணமடைந்து வீடு திரும்பினா்: இந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வந்தவா்களில், தேவாரம் அருகே லட்சுமிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கணவா்-மனைவி, ஆண்டிபட்டி அருகே டி.சேடபட்டி, தேவதானப்பட்டி ஆகிய ஊா்களைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 4 போ் குணமடைந்து சனிக்கிழமை, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினா்.

தற்போது தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 42 போ், கம்பம் அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் என மொத்தம் 44 போ் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடைகால் தியாகராஜ சுவாமி கோயிலில் குருபெயா்ச்சி பூஜை

வள்ளியூா் அருகே புனித சலேத் அன்னை ஆலயத்தில் கொடியேற்றம்

உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சேரன்மகாதேவி அருகே வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இருவா் கைது

கோயில் திருவிழாவில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: இளைஞா் கைது

SCROLL FOR NEXT