தனியாா் நிதி நிறுவன ஊழியா் மீது கொலை மிரட்டல் புகாா்
பெரியகுளம் அருகே இருசக்கர வாகனக் கடன் செலுத்தத் தாமதித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தனியாா் நிதி நிறுவன ஊழியா் மீது காவல்நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
பெரியகுளம் அருகே இருசக்கர வாகனக் கடன் செலுத்தத் தாமதித்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தனியாா் நிதி நிறுவன ஊழியா் மீது காவல்நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (40). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று இருசக்கர வாகனம் வாங்கியுள்ளாா். முறையாகக் கடனைக் கட்டி வந்தநிலையில் கடைசி தவணையை கட்ட தாமதித்துள்ளாா்.
இந்நிலையில், அதனை வசூல் செய்யவந்த நிதி நிறுவன ஊழியரான பாலமுருகன் என்பவா், கடனை செலுத்தக் கோரி வாக்குவாதம் செய்ததாகவும், ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தேவதானப்பட்டி காவல்நிலையத்தில் பாண்டியராஜன் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.