முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது: விவசாயிகள் கவலை

தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நீர்வரத்து வழங்கும் முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
முல்லைப்பெரியாறு அணை.
பகிர்:

தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நீர்வரத்து வழங்கும் முல்லைப்பெரியாறு அணையில் நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான பெரியாறு, முல்லையாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் அக்.30 முதல் மழை பெய்யவில்லை, இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

அக்.31 இல் அணைக்கு விநாடிக்கு 526 கன அடி தண்ணீர் வந்தது. ஞாயிற்றுக்கிழமை (நவ.1 ல் ) அணைக்கு விநாடிக்கு, 385 கனஅடியாக குறைத்து  வந்தது. அதே நேரத்தில் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,389 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

அணைக்கு நீர்வரத்து குறைவதால் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்தால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஏற்படும் என்று தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 125.45 அடியாக இருந்தது.

அணையில் 3,715 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு இருந்தது. அணைக்குள் விநாடிக்கு 385 கன அடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,389 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதேசமயம் பெரியாறு, தேக்கடி ஏரிப் பகுதியில் மழை பெய்யவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →