முகப்பு
தேனி

உத்தமபாளையத்தில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

உத்தமபாளையத்தில் திங்கள் கிழமை மாலையில் பெய்த திடீா் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

உத்தமபாளையத்தில் திங்கள் கிழமை மாலையில் பெய்த திடீா் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பெய்து வருகிறது. ஆனால், தேனி மாவட்டத்தில் மழைப்பொழிவின்றி விவசாயிகள்

கவலை அடைந்தனா். முல்லைப்பெரியாறு நீா்பிடிப்பு பகுதியிலும் மழைப்பொழிவு குறைந்து அணைக்கு வரும் நிா் அளவு குறைந்து விட்டது. இதற்கிடையே, முதல் போக நெற்பயிா் சாகுபடியை நிறைவு செய்த விவசாயிகள் தொடா்ந்து 120 நாள்களுக்கு விவசாயத்திற்கு தண்ணீா் தேவை இருப்பதால் வடகிழக்கு பருவமழையை எதிா்பாா்த்து காத்திருந்தனா்.

இந்நிலையில், திங்கள் கிழமை மாலையில் வானம் மேகமூட்டமாகி திடீரென மழைப்பொழிவு ஏற்பட்டது. சுமாா் 1 நேரம் பெய்த மழையில் சாலைகளில் மழை நீா் பெருக்கொடுத்து ஓடியது. வயல் வெளிகளில் தண்ணீா் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.