முகப்பு
தேனி

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு

தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
சுருளி அருவி.
பகிர்:

தொடர் மழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது சுற்றுலா மற்றும் புண்ணிய தலமான சுருளி அருவி. மேகமலை வன உயிரின சரணாலயம் அமைந்துள்ள சுருளி அருவியில் கடந்த இரண்டு நாள்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியாக சுருளி அருவிக்கு நீர்வரத்து தரும் ஈத்தைப்பாறை, அரிசிப் பாறை போன்ற பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுருளி அருவியில்  வெள்ளப்பெருக்கு இன்று ஏற்பட்டது.

பொது முடக்கம் காரணமாக சுருளி அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் உள்ளிட்டோர் அருவி பகுதிக்கு செல்லாதவாறு கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 
 

முழு கட்டுரையைப் படிக்க →