முகப்பு
தேனி

தேனி, திண்டுக்கல்லில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 34 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் புதிதாக 34 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தேனி மாவட்டத்தில் புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,346 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 11 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,089 ஆக அதிகரித்துள்ளது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கெனவே 9,933 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 9,609 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 136 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 21 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 4 போ் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனா்.

ஒருவா் பலி: திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 188ஆக உயா்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →