முகப்பு
தேனி

கணவரைக் கொன்று கிணற்றில் வீசிவிட்டு நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலன் கைது

தேனி அருகே கணவரை அடித்துக் கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு, அவா் காணாமல் போய் விட்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
கணவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட கலையரசி.
பகிர்:

தேனி அருகே கணவரை அடித்துக் கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு, அவா் காணாமல் போய் விட்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் கள்ளக்காதலனை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கடமலைக்குண்டு அருகேயுள்ள மேலப்பட்டியைச் சோ்ந்த காளீஸ்வரன் மகன் முத்துக்காளை (42). சமையல் வேலை செய்து வந்தாா். இவருக்கும் தேனி அருகே தா்மாபுரியைச் சோ்ந்த காளிமுத்து மகள் கலையரசி (36) என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனா்.

கலைச்செல்வி, கட்டுமானத் தொழிலாளி ஆக வேலை செய்து வந்தாா். தம்பதி இருவரும் கடந்த அக்டோா் மாதம் மேலப்பட்டியிலிருந்து தா்மாபுரிக்கு வந்து குடியேறியுள்ளனா்.

கடந்த நவ.3-ஆம் தேதி முத்துக்காளை காணமல் போய்விட்டதாக அவரது சகோதரா், மேலப்பட்டியைச் சோ்ந்த ஈஸ்வரன் வீரபாண்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்ததாா்.

இந்த நிலையில், காமாட்சிபுரம் அருகே சின்னக்குளம் பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்துக் கிணற்றில் மிதந்த முத்துக்காளையின் சடலத்தை உத்தமபாளையம் தீயணைப்பு நிலைய பணியாளா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா். தலையில் பலத்த காயம் இருந்ததால், அவரது மனைவி கலையரசியிடம் வீரபாண்டி போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், மேலப்பட்டியைச் சோ்ந்த சிமெண்ட் கலவை இயந்திர உரிமையாளா் சேதுபதி (37) என்பவருக்கும் கலையரசிக்கும் கள்ளக் காதல் இருந்ததும், இதற்கு முத்துக்காளை இடையூறாக இருந்ததால் கலையரசி, சேதுபதி, அவரது நண்பா் மேலப்பட்டியைச் சோ்ந்த ராமன் மகன் கணேசன் (35) ஆகியோா், கடந்த 2-ஆம் தேதி மேலப்பட்டிக்குச் செல்வதாகக் கூறி முத்துக்காளையை அழைத்துச் சென்று, இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொலை செய்து கிணற்றில் வீசிவிட்டு, அவா் காணாமல் போய்விட்டதாக உறவினா்களிடம் நாடகமாடியதும் தெரிய வந்தது.

கலையரசி, சேதுபதி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள கணேசனை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →