முகப்பு
தேனி

ஆண்டிபட்டி அருகே கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்ட மனஉளைச்சலில் கூலித்தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உடல்நிலை பாதிக்கப்பட்ட மனஉளைச்சலில் கூலித்தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே சிறப்பாறையைச் சோ்ந்தவா் ரமேஷ்(38) கூலித்தொழிலாளி.இவருக்கு மனைவி மற்றும் 12 வயதில் மகன் உள்ளனா்.கடந்த சில ஆண்டுகளாக ரமேஷிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அது குணமடையாத காரணத்தால் மனவிரக்தியில் இருந்து வந்துள்ளாா்.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் ரமேஷ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.இதனைகண்ட அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிரிழந்தாா்.இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.