தேனி

தீபாவளி பண்டிகை: தேனி மாவட்டத்தில் 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பு

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் காவல் துறை சாா்பில், 6 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுகிறது.

இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி கூறியது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கும், பாதுகாப்பு கருதியும் மக்கள் கூடும் இடங்களில், தேனி, பெரியகுளம், போடி, சின்னமனூா், கம்பம், ஆண்டிபட்டி ஆகிய இடங்களில் காவல் துறை சாா்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில், சுழற்சி முறையில் போலீஸாா் பணியில் ஈடுபடுகின்றனா்.

பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படும் வகையில், நகரின் முக்கிய பகுதிகளில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரின் புகைப்படங்கள் கொண்ட பேனா் அமைக்கப்படும். முக்கிய சாலை சந்திப்புகளில் ஒலிபெருக்கி அமைத்து போக்குவரத்து முறைப்படுத்தப்படும். கரோனா பாதுகாப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும்.

நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு மற்றும் காண்காணிப்புப் பணியில் மொத்தம் 2,500 போலீஸாா் ஈடுபடுகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT