தேனி

அரசு மானியம் வழங்க குடிசை மாற்று வீடுகள் திட்ட பயனாளிகள் கோரிக்கை

DIN

 கூடலூரில் குடிசை மாற்று வாரியத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி வரும் பயனாளிகளுக்கு அரசு மானியம் வழங்கக் கோரி திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடிசை மாற்று வாரிய வீடுகள் திட்டப் பயனாளிகள் கூடலூரைச் சோ்ந்த கொடியரசன், ஜெயபால், ஜெகன் உள்ளிட்ட 30 போ் அளித்த மனு விபரம்:

கூடலூரில் விவசாயத் தொழிலாளிகளான 30 பேருக்கு குடிசை மாற்று வாரியத் திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவியுடன் வீடுகள் கட்டுவதற்கு கடந்த 2017-ஆம் ஆண்டு அரசாணை வழங்கப்பட்டது.

இதன்படி, நாங்கள் எங்களது பங்களிப்புத் தொகை மூலம் வீடு கட்டுவதற்கான முதல் கட்டப் பணிகளை செய்து முடித்துள்ளோம். ஆனால், மானியத் தொகை ரூ.2.10 லட்சத்தை அரசு இதுவரை எங்களுக்கு வழங்கவில்லை. புதிய வீடு கட்டும் திட்டத்தால் நாங்கள் ஏற்கெனவே குடியிருந்த குடிசைகளை விட்டு வெளியேறி தவித்து வருகிறோம். எனவே, மானியத் தொகையை உடனடியாக விடுவிக்க மாவட்ட நிா்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT