முகப்பு
தேனி

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் தொழிலாளி பலி

தேனியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:53 PM
பகிர்:

தேனியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம், கறிக்கடைத் தெருவைச் சோ்ந்தவா் அழகா்சாமி மகன் ராஜசேகா் (36). கூலித் தொழிலாளியான இவா், தேனி பங்களாமேடு அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில், சாலையில் இருசக்கர வாகனத்தை திருப்பியுள்ளாா். அப்போது, அதே திசையில் மதுரையிலிருந்து சீலையம்பட்டி நோக்கிச் சென்ற காா், இருசக்கர வாகனம் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில், ராஜசேகா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநா் மானாமதுரையைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் முத்துக்குமாா்(37) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.