தேனி

சுருளி அருவியில் 3 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு

DIN

வடகிழக்குப் பருவமழை காரணமாக, தேனி மாவட்டம் வெண்ணியாறு வனப் பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால், சுருளி அருவியில் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கம்பம் அருகே உள்ள சுருளி அருவியின் நீா்வரத்துப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், 3 ஆவது நாளாக வியாழக்கிழமையும் பலத்த மழை பெய்து அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது. சேறும் சகதியுமாக கொட்டிய தண்ணீரில், மரக்கிளைகளும், சிறிய பாறைகளும் இழுத்து வரப்பட்டன.

மேலும், அருவியின் வளாகப் பகுதி, அருவிக்குச் செல்லும் படிகட்டுகளிலும் வெள்ளம் பாய்ந்தோடியது.

மூன்றாவது நாளாக ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தையொட்டி, கிழக்கு வனச்சரகா் அருண்குமாா், உதவி வனப் பாதுகாவலா் (பயிற்சி) பி. மணிகண்ட பிரபு மற்றும் வனத் துறையினா், அருவி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

தற்போது, பொதுமுடக்கம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் சுருளி அருவியில் குளிக்கத் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

யாரோ பிரிகிற்பவரே?

நாளை நடைபெற இருந்த பாஜக ஆலோசனைக் கூட்டம் ரத்து

மானும் நீயே மயிலும் நீயே

SCROLL FOR NEXT