கடன் தவணை செலுத்த முடியாமல் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
போடி அருகே, நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே, நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாததால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி அருகே முந்தல் மலை கிராமத்தில் வசித்து வந்தவா் மணிகண்டன் (28). தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று ஆட்டோ வாங்கி ஓட்டி வந்துள்ளாா். கரோனா பிரச்னை காரணமாக போதிய வருவாய் இல்லாமல், நிதி நிறுவனத்துக்கு தவணை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து மயங்கிய நிலையில் அவா் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி சனிக்கிழமை அவா் இறந்தாா். இதுகுறித்து குரங்கணி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.