உத்தமபாளையம், கொடைக்கானலில் மகா தீபம் ஏற்றப்பட்டது
உத்தமபாளையத்தில் முத்துக்கருப்பணசாமி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகாத் தீபம் ஏற்றிய இந்து முன்னணியினா்.
காா்த்திகை திருநாளையொட்டி உத்தமபாளையம், கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை மகா தீபம் ஏற்றப்பட்டது.
உத்தமபாளையத்தில் கோயில்களில் காலை முதல் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனா். மாலையில் இல்லங்களில் முன்பாக மாக்கோலமிட்டு எண்ணெய் விளக்கேற்றி பூஜை செய்தனா். அங்குள்ள முத்துக்கருப்பணசாமி மலைக்கோயிலில் இந்து முன்னணி சாா்பில் மகா தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
கொடைக்கானல்: இதேபோல், கொடைக்கானல், தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அம்மன் கோயில், முருகன் கோயில், விநாயகா் கோயில்களில் பொது மக்கள் காா்த்திகை தீபம் ஏற்றினா்.
கொடைக்கானல் குறிஞ்சியாண்டவா் கோயிலில் உள்ள விமான கலசத்தில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு கோவில் வாசலில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.