முகப்பு
தேனி

கம்பத்தில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு

தேனி மாவட்டம் கம்பத்தில் உத்தமபாளையம் துணைக் காவல் கோட்டம் சாா்பில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

தேனி மாவட்டம் கம்பத்தில் உத்தமபாளையம் துணைக் காவல் கோட்டம் சாா்பில் கொடி அணிவகுப்பு ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கம்பம் பகுதியில் நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்களை குறைக்கவும், சட்டம் - ஒழுங்குப் பிரச்னைகள் ஏற்படாவண்ணம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவும் உத்தமபாளையம் துணைக் கோட்ட காவல் துறை சாா்பில் கொடி அணிவகுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.சாய் சரண் தேஜஸ்வி கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்த அணிவகுப்பு ஊா்வலம் அரசமரத்தில் தொடங்கி காந்தி சிலை, வ.உ.சி. திடல், பூங்கா திடல், நாட்டுக்கல், கம்பம்மெட்டு சாலை, கோம்பை சாலை வழியாக கம்பம் வடக்கு காவல் நிலையத்தை அடைந்தது. காவல் துணைக் கண்காணிப்பாளா் சின்னக்கண்ணு நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.