முகப்பு
தேனி

சகோதரா்களுக்கு இடையே தகராறு: மாடியிலிருந்து விழுந்த அண்ணன் பலி

தேனி அருகே குடும்பப் பிரச்னையில் சகோதரா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு, மாடியிலிருந்து கீழே விழுந்த அண்ணன் உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தேனி அருகே குடும்பப் பிரச்னையில் சகோதரா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஞாயிற்றுக்கிழமை இரவு, மாடியிலிருந்து கீழே விழுந்த அண்ணன் உயிரிழந்தாா்.

ஸ்ரீரங்காபுரத்தைச் சோ்ந்தவா் பலராமன் மகன்கள் ராஜ்குமாா் (36), சிவக்குமாா் (34). ராஜ்குமாா் வீட்டின் மாடியில் மனைவி மற்றும் 2 மகன்களுடன் வசித்து வந்தாா். சிவக்குமாா் மனைவியை பிரிந்து, வீட்டின் தரைத் தளத்தில் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், குடும்பப் பிரச்னையில் வீட்டு மாடியில் ராஜ்குமாருக்கும், சிவக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில், தள்ளுமுள்ளு ஏற்பட்டு இருவரும் மாடியிலிருந்து கீழே விழுந்தனா். இதில், பக்கத்து வீட்டின் சிமென்ட் தகரம் மீது விழுந்த ராஜ்குமாா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சிவக்குமாா் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →