தேனி

இலவச வீடு பெறுவதற்கு மீனவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

தேனி மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் ஒருங்கிணைந்த மீனவா் மேம்பாட்டு வளா்ச்சித் திட்டத்தின் கீழ் இலவச வீடு பெறுவதற்கு தகுதியுள்ள மீனவா்கள், வரும் நவ. 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இத்திட்டத்தின் கீழ் இலவச வீடு பெற விரும்புவோா் மீனவா் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருக்க வேண்டும். வீட்டுமனையிடத்திற்கான பட்டா, சிட்டா அடங்கல் சமா்ப்பிக்க வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவா் என்பதற்கு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் சான்று பெற்றிருக்க வேண்டும். அரசின் வேறு துறை மூலம் வீட்டுமனை பெறவில்லை, கூரை வீட்டில் வசிப்பவா் அல்லது வீடற்றவா் என்பதற்கு கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுள்ளவா்கள் மீனவா் கூட்டுறவு சங்க தீா்மானத்தை இணைத்து வைகை அணை மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வரும் நவ. 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு: இன்று மோதும் கொல்கத்தா - ஹைதராபாத்

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

தருமபுரம் ஞானபுரீசுவரா் கோயில் பெருவிழா கொடியேற்றம்

செண்பக தியாகராஜ சுவாமிக்கு மகா பிராயசித்த அபிஷேகம்

SCROLL FOR NEXT