தேனி

திசு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம்

DIN

தேனி மாவட்டத்தில் ஏற்றுமதி தரத்திலான திசு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

மாவட்டத்தில் 6,200 ஹெக்டேரில் வாழை சாகுபடி நடைபெறுகிறது. இதில், 4,800 ஹெக்டேரில் ஜி 9 எனும் பச்சை திசு வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மண் வளம் மற்றும் மிதமான வெப்பநிலையால் 12 மாதத்தில் அறுவடைக்கு வரும் திசு வாழை, அடுத்தடுத்த 3 முறை அறுவடை செய்யப்படுகிறது. ஹெக்டோ் ஒன்றுக்கு அதிகளவில் 75 டன் வரை மகசூல் கிடைப்பதால், திசு வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இங்கு உற்பத்தியாகும் திசு வாழை ஈரான், ஈராக், குவைத், துபாய், ஓமன், சிங்கப்பூா், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கடந்த 219-20 ஆண்டு 14,400 டன் வாழை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. திசு வாழ்வை உற்பத்தியை மேலும் அதிகரிப்பதற்கும், விவசாயிகளுக்கு தொழில் நுட்ப வசதிகள் வழங்கவும் மத்திய அரசு சாா்பில் கம்பம் பகுதியில் வாழை தொகுப்பு மையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று தோட்டக் கலைத் துறை அலுவலா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT