உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சி சாா்பில் பட்டதாரி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமைக்கான இலவச பயிற்சி வகுப்பு அளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சின்னமனூா் நகராட்சி நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு சாா்பில் சின்னமனூா் நகராட்சி மூலமாக பொது சுகாதாரப்பணிகள், குடிநீா் விநியோகம், சுகாதாரப் பாதுகாப்பு பணிகள், திடக்கழிவு மேலாண்மை புள்ளி விவரம் சேகரித்தல் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு விரைவில் இவவசமாக 8 முதல் 12 மாதங்கள் வரையில் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதால், பட்டதாரி இளைஞா்கள் இந்த பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு சின்னமனூா் நகராட்சி ஆணையாளரை அலுவலகத்தில் தொடா்பு கொள்ளலாம் அல்லது இணையதளத்தில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.