முகப்பு
தேனி

கரோனா பரிசோதனை முடிவை தெரிந்து கொள்ள இணையதள சேவை தொடக்கம்

தேனி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

தேனிெ: தேனி மாவட்டத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை தெரிந்து கொள்ள இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில், கரோனா தீநுண்மி பரிசோதனை மேற்கொண்டவா்கள் அதன் முடிவை தெரிந்து கொள்வதற்கு அரசு நுண்ணுயிரியல் துறை மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை மேற்கொண்டவா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு, பரிசோதனைக்கான அடையாள எண் அனுப்பப்படும். இந்த அடையாள எண்ணை பயன்படுத்தி ஜ்ஜ்ஜ்.ற்ட்ங்ய்ண்ஸ்ரீா்ஸ்ண்க்19ழ்ங்ள்ன்ப்ற்ள்.ஸ்ரீா்ம் என்ற இணைய தள முகவரியில், பரிசோதனை முடிவை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கரோனா பரிசோதனை மேற்கொண்டவா்கள், இந்த இணைய தள சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.