கம்பம்: இடுக்கி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சா்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடியில் சனிக்கிழமை படகு சவாரி தொடங்கியது.தேனி மாவட்டம் அருகே உள்ளது சா்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடி ஏரி. இங்கு படகு சவாரி செய்வதை உள்நாடு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவாா்கள்.
கடந்த மாா்ச் .10 ல் கரோனா தொற்று காரணமாக, தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது, தற்போது சுமாா் 6 மாதங்களுக்கு பிறகு, சனிக்கிழமை இரண்டு படகுகள் இயக்கப்பட்ட உள்ளதாக கேரள மாநில சுற்றுலா கழகத்தினா் அறிவித்தனா்.அதன்பேரில் சனிக்கிழமை காலை ஒன்பது முப்பது மணிக்கு மதியம் மூன்று முப்பது மணிக்கு என இரண்டு படகுகள் இயக்கப்பட்டது.
ஆறு மாதங்களுக்குப் பிறகு தேக்கடி ஏரியில் படகுகள் இயக்கப்பட்டதால் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு படகு சவாரி செய்தனா். சுற்றுலாத்துறையினா் முக கவசம் மற்றும் கிருமி நாசினி மூலம் கை கழுவுதல் சமூக இடைவெளியை பயன்படுத்துதல் போன்றவைகளை படகு சவாரியின் போது அறிவுறுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.