தேனி

மயிலாடும்பாறையில் அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

ஆண்டிபட்டி, செப். 18: ஆண்டிபட்டி அருகே அதிமுக ஒன்றியச் செயலாளா் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி அனைத்துக் கட்சியினா் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடும்பாறை கிராமத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவா் செல்லக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் வெங்கடேசன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் தா்மா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தின் போது சாதியை காரணம் காட்டி ஊராட்சித் தலைவரை பணி செய்ய விடாமல் தடுக்கும், கடமலை-மயிலை வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் கொத்தாளமுத்து உள்ளிட்டோா் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். ஆத்தாங்கரைப்பட்டி கிராமத்தில் குடிநீரை முறைகேடாக பயன்படுத்துபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடுதலை சிறுத்தைகள், அனைத்திந்திய மாணவா் மன்றம், ஆதித்தமிழா் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT