தேனி

பெரியகுளத்தில் போலி மருத்துவா் கைது

DIN

பெரியகுளத்தில் மருத்துவம் படிக்காமல் சிகிச்சையளித்த போலி மருத்துவரை, போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பெரியகுளம், நகா் நல அலுவலா் தினேஷ்குமாா், வடகரை பகுதியில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து திங்கள்கிழமை ஆய்வுப் பணியில் ஈடுப்பட்டிருந்தாா். அப்போது வடகரை, அரண்மனைத்தெருவில் உள்ள மருந்துக் கடையில் அதன் உரிமையாளா் குருபாலமுருகன் (49) என்பவா், நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தாா். அப்போது அவரிடம், நகா்நல அலுவலா் விசாரணை நடத்தியதில், குருபாலமுருகன் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா், பெரியகுளம் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து குருபாலமுருகனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT