முகப்பு
தேனி

தேர்தல் அலுவலர்கள் பற்றாக்குறை: சாலையில் தடுப்பு கோடு வரைந்த பெண் காவல் ஆய்வாளர்

கம்பம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணி செய்ய அலுவலர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பெண் காவல் ஆய்வாளர் சாலையில் தடுப்பு கோடு வரைந்து பணியில் ஈடுபட்டார்.

Updated On : 5 ஏப்ரல், 2021 at 1:24 PM
சாலையில் தடுப்பு கோடு வரையும் பெண் காவல் ஆய்வாளர்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:26 AM

கம்பம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணி செய்ய அலுவலர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பெண் காவல் ஆய்வாளர் சாலையில் தடுப்பு கோடு வரைந்து பணியில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதியில் 2 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள் 25 ஊராட்சிகள் கொண்டதாக உள்ளது. ஏப்ரல் 6-இல் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்ற நிலையில் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பணி செய்ய அலுவலர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

கம்பம் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து மின் வளக்குகள் இயந்திரங்கள் வைப்பதற்கு மேஜைகள் அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை போன்றவைகளை பராமரித்தல் வாக்குச்சாவடி முகவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

Advertisement

அதே நேரத்தில் கம்பம் நகராட்சியில் உள்ள ஒருசில வாக்குச்சாவடி மையங்கள் ஆரம்ப பள்ளிக் கூடங்களாக இருப்பதால் அடிப்படை வசதிகள் இல்லாமலும் மேற்கூரை தகரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.

இங்கு பணியாற்றும் வாக்கு அலுவலர்களுக்கு தேவையான வசதிகள் குறைவாகவும் மிகவும் சிரமமாகவும் உள்ளது. இதனால் முன்னேற்பாடுகள் செய்கின்ற வருவாய்த்துறை அலுவலர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

வாக்கு சாவடி மையங்களில் இருந்து 100,  200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் தடுப்பு கோடுகள் வரைவதற்கு கூட பணியாளர்கள் இல்லை.

இதற்கிடையில் நகராட்சி ஆலமரத்தெரு துவக்க பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இதே நிலை நீடித்தது.

மேலும் வாக்குப்பதிவு மையங்களில் 200 மீட்டருக்கு அப்பால் அரசியல் கட்சியினர் நிற்க வேண்டும் என்ற தடுப்பு கோடு வரைவதற்கு பணியாளர் இல்லை.

இதனால் கம்பம் தெற்கு காவல் ஆய்வாளர் என்.எஸ்.கீதா நேரடியாக மையத்திற்குச் சென்று அங்கிருந்த பெண் பணியாளர் ஒருவரிடம் வெள்ளை கலர் பெயிண்ட் டப்பாவை வாங்கி சாலையில் தடுப்பு கோடு வரைந்தார்.

எல்லைக் கோடுகள் வரைவதற்கு கூட பணியாளர்கள் நியமிக்கப்படாமல் காவல் ஆய்வாளரே நேரடியாக களத்தில் இறங்கி பணியாற்றியது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.