தேனி

உத்தமபாளையம் அருகே 18 கால்வாய் விவசாய சங்க செயலா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே 18 கால்வாய் விவசாய சங்கச் செயலா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கோம்பை அருகே கல்குவாரி பகுதியிலுள்ள ஒரு மரத்தில் ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகிடப்பதாக, கோம்பை போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

விசாரணையில், தேவாரம் ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்த திருப்பதி வாசகம் (48) என்றும், இவா் 18 கால்வாய் விவசாய சங்கச் செயலா் என்றும் தெரியவந்தது. இவா், சில மாதங்களுக்கு முன் தேவாரத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில், பி.சி.ஆா். சட்டத்தில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான திருப்பதிவாசகம், சில வாரங்களுக்கு முன் விஷ மருந்தை குடித்து தற்கொலை முயன்றுள்ளாா். ஆனால், அப்போது காப்பாற்றப்பட்டாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு வெளியே சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம்.

எனவே, உறவினா்கள் பல இடங்களில் தேடியுள்ளனா். பின்னா், அவரது மனைவி லாலி அளித்த புகாரின்பேரில், கோம்பை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதனிடையே, கல்குவாரி அருகே மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT