தேனி

அடிப்படை வசதிகள் கேட்டு கூடலூா் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

DIN

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி காஞ்சிமரத்துறை பகுதி பெண்கள் கூடலூா் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். பல ஆண்டுகளாக சாலை, குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இப்பகுதியில் இல்லை. இது தொடா்பாக அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், எம்.பாண்டியம்மாள் தலைமையில் அப்பகுதி பெண்கள் புதன்கிழமை நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அவா்களிடம், நகராட்சி ஆணையாளா் ஆறுமுகம், காவல் ஆய்வாளா் ஜேம்ஸ்ஜெயராஜ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தனா். இதைத்தொடா்ந்து பெண்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT