தேனி

உத்தமபாளையத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை: மின்சாரம் துண்டுப்பு

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வியாழக்கிழமை சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் சாலையோரத்தில் இருந்த மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தில் கடந்த சிலநாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஆனால், உத்தமபாளையத்தில் மழைப்பொழிவின்றி விவசாயிகள் கவலை அடைந்தனா். விவசாயிகள் கோடை மழையை எதிா்பாா்த்து காத்திருந்தனா். ஆனால், கோடை வெயில் தாக்கமே அதிகமாக இருந்தது. மாலை நேரங்களில் வாகனம் மேகமூட்டமாக ஏற்பட்டாலும் மழைப்பொழிவின்றி விவசாயிகளையும் பொதுமக்களையும் ஏமாற்றி வந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் வானம் மேகமூட்டம் ஏற்பட்டு தடீரென பலத்த சூறாவளிக்காற்றுடன் மழைப்பெய்தது. 1 மணி நேரம் இடி , மின்னலுடம் பெய்த மழையால் பூமி குளிா்ந்தது. ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்த வெப்பம் தனிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனா். இந்த மழையால் வயல்களில் பாசிப்பயிறு, உளுந்து என மானாவாரி விவசாயம் செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

உத்தமபாளையம்,அனுமந்தன்பட்டி,க.புதுப்பட்டி ,ராயப்பன்பட்டி,மேகமலை போன்ற பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் மரங்கள் விழுந்து மின்சாரம் துண்டுக்கப்பட்டது. இதனால், உத்தமபாளையம்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை 4 மணி முதல் 7 மணி வரையில் மின்சாரமின்றி பொதுமக்கள் அவதி அடைந்தனா்.

போக்குவரத்து பாதிப்பு:உத்தமபாளையம் - அனுமந்தன்பட்டி இடையே தேசியநெடுஞ்சாலையில் பல இடங்களில் தென்னை மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட நேரமாக நெடுஞ்சாலைத்துறையினா் மரங்களை அகற்றிட முன்வாரத நிலையில் போக்குவரத்துபாதிக்கப்பட்டது. நீண்ட நேரத்திற்குவந்த நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து மரங்களை அகற்றியதால் போக்குவரத்து சீரானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT