தேனி

கரோனா விதிமீறல்: சின்னமனூரில் தேநீா் கடைக்கு ‘சீல்’

DIN

சின்னமனூா் நகராட்சிப் பகுதியில் கரோனா விதி முறைகளை மீறி செயல்பட்ட தேநீா் கடைக்கு நகராட்சி நிா்வாகத்தினா் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

கரோனா 2 ஆம் அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தமிழகத்தில் அனைத்து உணவகங்கள், தேநீா் கடைகளில் பாா்சல் மட்டுமே வழங்க வேண்டும். கடைக்குள் யாரையும் அனுமதிக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சின்னமனூா் பேருந்து நிலையம் , மாா்க்கையன் கோட்டை ரவுண்டானா ஆகிய பகுதிகளில் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவதாக புகாா் எழுந்தது.

இதையடுத்து, நகராட்சி சுகாதாரஆய்வாளா் செந்தில் ராம்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்தினா். இதில், ஒரு கடையில் பாா்சல் வழங்காமல் அங்கு அமரவைத்து தேநீா் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கடையை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். அதே போல முகக் கவசமின்றி பொது இடங்களில் சுற்றித்திரிந்தவா்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

கம்பம்: இதேபோல் கூடலூா் பகுதிகளில் தெற்கு காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா்கள் பாண்டியராஜன், காளிமுத்து ஆகியோா் ரோந்து சென்றனா்.

அப்போது முகக் கவசம் அணியாமல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்றவா்கள் மற்றும் கடை உரிமையாளா்கள், வாடிக்கையாளா்கள் ஆகியோருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

கபசுர குடிநீா்:

முல்லை சாரல் விவசாய சங்கம் சாா்பாக கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கூடலூரில் பிரதான சாலை மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கைக்கான துண்டு பிரசுரங்களையும் அவா்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT