தேனி

ஆடி அமாவாசை: சுருளி அருவி பகுதிக்குச் செல்லத் தடை 

DIN

தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆன்மீகத்தலமான சுருளி அருவி பகுதிக்கு ஆடிஅமாவாசை நாளில் (ஞாயிற்றுக்கிழமை ) செல்ல ராயப்பன்பட்டி போலீசார் தடை விதித்துள்ளனர். 
தேனி மாவட்டத்தில் புகழ்பெற்றது சுற்றுலா மற்றும் ஆன்மீகத்தலமான சுருளி அருவி, ஆண்டு தோறும் தை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய மக்கள் திரளாக வருவார்கள். 
கரோனா பரவலால் புலிகள் காப்பகத்தினர் சுருளி அருவி செல்லும் பாதையை அடைத்துள்ளனர். இதனால் அருவியின் ஆற்றங்கரை பகுதியில் பக்தர்கள் நேர்ச்சை கடன்களை செலுத்தி வந்தனர். 

இதையும் படிக்கலாமே|  நேபாளம் : கரோனாவால் 10,000 பேர் பலி 

இந்நிலையில் அரசு பொதுமுடக்கத்தை மூன்று நாள்கள் அறிவித்திருப்பதால், ஆடிஅமாவாசையான ஞாயிற்றுக்கிழமை சுருளி அருவி மற்றும் ஆற்றங்கரை வரை செல்ல ராயப்பன்பட்டி போலீசார் தடைவிதித்து, க.விலக்கு, பழைய சுருளி அருவி சாலை உள்ளிட்ட பகுதிகளை சீல் வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT