தேனி

தேனி: வாகனங்களுக்கு இலவச "ஜெய்ஹிந்த்" ஸ்டிக்கர்

​தேனியில் முத்துக்கருப்பையா என்பவர் வாகனங்களுக்கு இலவசமாக "ஜெய்ஹிந்த்" ஸ்டிக்கரை ஒட்டி வருகிறார்.

DIN


தேனியில் முத்துக்கருப்பையா என்பவர் வாகனங்களுக்கு இலவசமாக "ஜெய்ஹிந்த்" ஸ்டிக்கரை ஒட்டி வருகிறார்.

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம், பெரியகுளம், தெற்குத் தெருவைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் கே. முத்துக்கருப்பையா தனது சொந்த செலவில் "ஜெய் ஹிந்த்' ஸ்டிக்கர் தயாரித்து பெரியகுளம் நகர் பகுதியில் உள்ள பைக்குகள், கார், ஆட்டோக்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி சுதந்திர தின வாழ்த்துக்களைச் சொல்லி வருகிறார்.

இதுகுறித்து முத்துக்கருப்பையா தெரிவித்தாவது:

"தமிழகத்தைச் சார்ந்த செண்பகராமன் என்று அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை (Chempakaraman Pillai, செப்டம்பர் 15, 1891 – மே 26, 1934) இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர். ஜெய் ஹிந்த் என்ற வார்த்தை இந்திய இளைஞர்களின் நரம்புகளை வலுவாக்கி ஆங்கிலேயர்களை வெளியேற்றும் தாரக மந்திரமாக விளங்கியது. இன்றைய இளைஞர்கள் உச்சரிக்கும் வகையில் பைக்குகள், கார் மற்றும் ஆட்டோக்களில் 750 ஸ்டிக்கர்களை ஒட்டி வருகிறேன்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திரம்: கோயில் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவிப்பு !

ஃபெரோவின் தங்கக் கிரீடம் உள்ளே... உலகின் மிகப்பெரிய தொல்லியல் அருங்காட்சியகம் எகிப்தில் திறப்பு!

4 எலிகளுடன் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்த சீனாவின் இளம் வீரர் குழு!

தெரியாத நபரிடமிருந்து Friend Request! SCAM-ல் சிக்க வேண்டாம்! | Cyber Shield | Cyber Security

வேலூர்: மலைப் பகுதியில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT