சுருளி மலை ஸ்ரீ ஐயப்பனுக்கு நேத்ர விழி தரிசனம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, சுருளி மலை ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் நேத்ர விழி தரிசனம் மற்றும் தைலக்காப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி, சுருளி மலை ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் நேத்ர விழி தரிசனம் மற்றும் தைலக்காப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுருளி மலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் மண்டல பூஜை முடிந்து, மகர விளக்கு நாளுக்கான பூஜைகள் நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது..
சுருளி மலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் மூலவர் 70 ஆண்டுகள் ஆன பழமையானவர், அதனால் மூலவருக்கு வாரம் தோறும் தைலகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இந்நிகழ்வின்போது நேத்ர விழி தரிசனம் மற்றும் பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றது, மூலவர் கண் திறப்பான நேத்ர விழி தரிசன பூஜையின் போது ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூஜைகளை கோயில் மேல்சாந்தி கணேஷ் திருமேனி செய்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.