தேனி மாவட்டம் கம்பத்தில், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நகராட்சி துப்புரவுத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கம்பம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (50) . இவா் கம்பம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக இருந்து வந்தாா். இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்காக அவா் சிகிச்சை எடுத்து வந்தும் நோய் குணமாகாததால் கடந்த 6 ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கினாா். இதையடுத்து குடும்பத்தாா் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் ஞாயிற்றுக்கிழமை இறந்தாா்.
இது குறித்து கம்பம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளா் என்.எஸ். கீதா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.