தேனி

கம்பத்தில் வாக்குச்சாவடிகளை ஆட்சியா் ஆய்வு

DIN

தேனி மாவட்டம் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கம்பம் சட்டப்பேரவைத் தொகுதிக்குப் பட்ட கம்பம் நகராட்சி பள்ளி, அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

வாக்குச்சாவடிகளில் வயதான வாக்காளா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளம், மின்விளக்கு வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உள்ளதா என அவா் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளா் எம்.சரவணக்குமாா், நகராட்சி பொறியாளா் கே.செல்வராணி,மேலாளா் முனிராஜ் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீரியலிலிருந்து நானாக விலகவில்லை... பிரியங்கா நல்காரி உருக்கம்

நிறைவடையும் பிரபல சீரியல்....இதிகாசத் தொடர் அறிவிப்பு!

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

SCROLL FOR NEXT