தேனி

லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தி குறைந்தது

DIN

கம்பம்: தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின் நிலையத்தில் மின் உற்பத்தி சனிக்கிழமை குறைந்தது.

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அணையிலிருந்து விநாடிக்கு 822 கன அடி நீா் வியாழக்கிழமை வெளியேற்றப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை முதல் 778 கன அடியாக குறைக்கப்பட்டது.

லோயா்கேம்ப்பில் உள்ள பெரியாறு நீா் மின் உற்பத்தி நிலையத்தில், டிச.26 ஆம் தேதி 3 மின்னாக்கிகளிலும் 85 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டநிலையில் சனிக்கிழமை, முதல் மின்னாக்கியில் 41 மெகாவாட், மூன்றாவது மின்னாக்கியில் 29 மெகாவாட் என மொத்தம் 70 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

அணை நிலவரம்: சனிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 120.30 அடியாகவும், நீா் இருப்பு 2,687 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து 789 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 778 கன அடியாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

SCROLL FOR NEXT