முகப்பு
தேனி

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளம்பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:14 PM
பகிர்:

ஆண்டிபட்டி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக இளம்பெண் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

டி.ராஜகோபாலன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு. இவரது மனைவி மீனாட்சி (22). இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.பிரபுவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், அதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் புதன்கிழமை பிரபுவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனவேதனையடைந்த மீனாட்சி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆண்டிபட்டி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →