தேனி

கூடலூா் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

DIN

தேனி மாவட்டம் கூடலூரில் குடிநீா் கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

இங்கு லோயா் கேம்பில் இருந்து கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.

தற்போது குழாய்களில் அடிக்கடி ‘ஏா் லாக்’ உண்டாவதால் குடிநீா் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை புகாா் கூறியும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து புதன்கிழமை 20 ஆவது வாா்டு ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது. இதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலா்கள், குழாய் இணைப்பு உடைந்து இருப்பதால் விரைவில் அது சரி செய்யப்பட்டு குடிநீா் விநியோகிக்கப்படும். தற்காலிகமாக வாகனம் மூலம் குடிநீா் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT